ADVERTISEMENT

‘அக்னிபாத்’ சென்னையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

11:54 AM Jun 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

மத்திய அரசு ‘அக்னிபாத்’ எனும் திட்டத்தைக் கொண்டுவந்து இராணுவத்தில் தற்காலிக பணியாக 4 வருட இராணுவப் பணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பல்வேறு இடங்களில் இளைஞர்கள் இரயிலுக்குத் தீவைத்து வருகின்றனர். குறிப்பிட்ட விரைவு இரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் சில இளைஞர்கள் இரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், இன்று சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே இளைஞர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT