ADVERTISEMENT

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு!

09:40 AM Nov 08, 2019 | santhoshb@nakk…

சென்னையில் பல்வேறு இடங்களில் பனி மூட்டத்துடன் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. காற்றின் தரக்குறியீடு 50க்கு கீழ் இருந்தால் மட்டுமே தரமான காற்று ஆகும். ஆனால் சென்னை மணலியில் அதிகபட்சமாக காற்றின் தரக்குறியீடு 320 வரை அதிகரித்து உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதேபோல் வேளச்சேரியில் காற்றின் தரக்குறியீடு 292 ஆகவும், ஆலந்தூரில் காற்றின் தரக்குறியீடு 285 ஆக உள்ளது. காற்றின் மாசு அதிகரிப்புக்கு புல் புல் புயலால் காற்றின் வேகம் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லியை தொடர்ந்து சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், முதியவர்கள், நோயாளிகளுக்கு சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT