ADVERTISEMENT

செல்போன் டவர் விழுந்து சிறுமி காயம் - ஊழியர்களுக்கு அடி உதை

04:21 PM Apr 05, 2019 | raja@nakkheeran.in

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடெல்லி பகுதியை சேர்ந்தவர் மகபூப் அலி. இவர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வீட்டின் மேல் மாடி பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு டவர் அமைக்க வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ஏப்ரல் 5-ம் தேதி காலை அந்த தனியார் நிறுவனத்தினர் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று ஊழியர்கள் உதவியுடன் செல்போன் டவரை கழுட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது செல்போன் டவரின் ஒரு பகுதி எதிர் பாராத நிலையில் அருகில் இருந்த குலாப் என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த குலாபின் மகள் 12 வயதேயான ஆயிஷா சித்திக்காவின் தலை மற்றும் கால் பகுதியில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சிறுமியை உடனடியாக வீட்டுக்குள் சென்று காப்பாற்றி சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு அங்கு குவிந்த மக்கள் தகவல் சொல்லாமலும், பாதுகப்பற்ற முறையில் செல்போன் டவர் கழுற்றும் பணியில் ஈடுப்பட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர், அடிவாங்கிய ஊழியர்கள் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் அறிந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT