ADVERTISEMENT

சாத்தான்குளம் கொலை வழக்கில் மேலும் 3 போலீசாரை காவலில் எடுக்க சி.பி.ஐ. மனுத் தாக்கல்!

11:44 AM Jul 20, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்களின் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. குற்றச்சாட்டக்குள்ளான காவலர்களைக் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத் தாக்கல் செய்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT