The seven-hour CBI investigation at sathankulam

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை மரணம் தொடர்பான விசாரணையை ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முன்னதாக ஜெயராஜ் வீட்டில்நான்கு மணி நேரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

அதனையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டனர்.சிறைக்கு அழைத்துசெல்வதற்கு முன் ஜெயராஜ், பென்னிக்ஸிற்குஅரசு மருத்துவமனையில்பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில் மருத்துவ பரிசோதனை செய்தது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த அரசு மருத்துவமனையில் விசாரணைமேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் மீண்டும் தற்பொழுதுபென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் வீட்டில்அவரது குடும்பத்தினர், ஜெயராஜின் மனைவி, மகள், உறவினர்களிடம் கடந்த ஏழு மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.