/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SZSFSFSFSF_21.jpg)
சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரனை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில் இருவரும் மரணமடைந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டியினர் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கு சி.பி.ஐ.யின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையிலிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dxf_1.jpg)
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தசம்பவத்தில்தமிழக அரசு நிதி உதவி அளித்திருந்ததோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிஸ்உயிரிழந்த வழக்கில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியைநாளை முதல்வர் வழங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)