Skip to main content

பெண் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்: பெற்றோர்களுக்கு நீதிபதி அறிவுரை

Published on 01/08/2018 | Edited on 01/08/2018
Chidren


குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அனுப்பிவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நீதிபதி அறிவுரை கூறினார்.
 

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு விழாவில், அம்மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மகிழேந்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
 

 

 

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கவனத்தோடு பார்த்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பெற்றோர்கள் எடுத்து சொல்ல வேண்டும்.
 

பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்து செல்ல அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அனுப்பிவிட்டு நம் வேலை முடிந்து விட்டது என்று இருக்கக் கூடாது. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்கிறார்களா என்று கவனிக்க வேண்டும்.
 

குழந்தைகளிடம் முகம் தெரியாதவர்கள் தவறான விஷயம் கூறினால் அதனை குழந்தைகள் உடனே தங்களுடைய பெற்றோர்களிடமோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையம், 1098 என்ற எண்ணிற்கோ, நீதிமன்றத்திலோ, நீதிமன்றத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.
 

பெண் குழந்தைகளை கூடுமான வரையில் நன்றாக படிக்க வைக்க வேண்டும். 18 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது பெற்றோர்களுக்கு தண்டனைக்கு உரிய செயலாகும். இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்; மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Mallikarjuna Karke advice for Constituencies contested by Congress in Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. 

இதனிடையே, ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று (13-02-24) தமிழகம் வந்தார். மேலும், அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர்களில் ஒருவரான சிரிவெல்ல பிரசாத் உடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (14-02-24) ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அண்மையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

''முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க''- கோரிக்கை வைத்த சிறுமி

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

"Chief Minister, because my chin is like this, no one should talk to me" - the girl who made a request!

 

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு தமிழக முதல்வர் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ்- சௌந்தர்யா தம்பதியினர். இவர்களது 9 வயது மகள் டானியா. வீராபுரம் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று வயது வரை சராசரி குழந்தையாக இருந்த டானியாவின் கன்னத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றியது. இதனை ரத்த கட்டி  என பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்ட நிலையில் நாளடைவில் அந்த புள்ளி பாதி முகத்தை சிதைக்கும் அளவிற்கு உருவானது. உடனே பெற்றோர் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்பு அவரது கண், கன்னம், வாய் என முகத்தின் பாதியை சிதைத்துவிட்டது. தங்களது சக்திக்கும் மீறி பல இடங்களில் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைகளை தொடங்கிய நிலையில் அதுவும் கைகொடுக்கவில்லை.

 

பள்ளி செல்லுகையிலும், டியூசன் செல்லுகையிலும் சிறுமி டானியாவை சக மாணவர்களே ஒதுக்கி வைப்பது டானியாவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. இதனால் வீட்டிற்கு வந்தவுடன் அழுவதாக சிறுமியின் தாய் சௌந்தர்யா தெரிவிக்கிறார். எப்படியாவது எங்கள் குழந்தையை அரசு மீட்டுத்தர வேண்டும். மற்ற குழந்தைகளை போல எங்கள் குழந்தையும் இருக்க வேண்டும். அதற்கு முதல்வர் உதவி வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கின்றனர் டானியாவின் பெற்றோர்.

 

தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சிறுமி டானியா தெரிவிக்கையில்,  ''பிரெண்ட்ஸ்ங்க கூட வெறுக்குறாங்க. உனக்கு இந்த மாதிரி கன்னம் இருக்கு நீ இங்க வந்து உட்காரக்கூடாது. நீ லாஸ்ட்ல போய் உட்காரு'னு சொல்வாங்க. கடைசி பெஞ்ச் இருக்கும் அங்கதான் நான் போய் லாஸ்ட்ல உட்காருவேன். புக்கு கூட எடுத்துட்டு வந்து கைல தரமாட்டாங்க டேபிள் மேலதான் வைப்பாங்க. முதலமைச்சர் ஐயா எனக்கு கன்னம் இப்படி இருக்குறதால யாருமே பேசமாட்றாங்க. எனக்கு நீங்க சரிபண்ணி தாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு'' என்றார் ஏதுமறியா மழலை குரலில்.