ADVERTISEMENT

தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற விழுந்த கார்... வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி! 

05:13 PM Jan 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில், நடுரோட்டில் சென்ற கார் ஒன்று, தடுப்புச் சுவர்மீது மோதி தலைக்குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயபுரம் மேம்பாலம் நோக்கிச்சென்ற கார் ஒன்று சாலையின் தடுப்புச் சுவரில் மோதி, தலைக்குப்புற விழுந்தது. மணிராஜ் என்ற நபர் ஓட்டிவந்த அந்த காரானது, திருவொற்றியூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்தது. காரை ஓட்டிவந்த மணிராஜ் படுகாயம் அடைந்த நிலையில், அவர் ஸ்டான்டலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக வடக்குக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT