incident in chennai

ஓட்டுவதற்கு கார் கொடுக்காததால் ஆத்திரமடைந்த உறவினர் பெட்ரோல் ஊற்றி காரை கொளுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியை சேர்ந்த டாம்னிக்என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கார் ஒன்றை புதிதாக வாங்கி மகன்டார்வினிடம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் உறவினரான ஜர்வீசைகாரில் ஏற்ற மறுத்துள்ளார் டார்வின். அதேபோல் புதிய காரை ஓட்ட கேட்டும் ஜர்வீஸிடம்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஜர்வீஸ் கார் கண்ணாடியை சில நாட்களுக்கு முன்பு கல்லால் உடைத்திருக்கிறார்.

Advertisment

incident in chennai

Advertisment

இந்நிலையில் நள்ளிரவில் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வந்த ஜர்வீஸ், காரின் மீதுபெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள்அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.சி.டி.வி காட்சி அடிப்படையில் ஜர்வீசை போலீசார் கைது செய்தனர்.