ADVERTISEMENT

ஈரோடு இடைத்தேர்தல்; வாக்குப்பெட்டி மையத்திற்கு துப்பாக்கியுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு

10:58 AM Feb 28, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகமே உற்று நோக்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547 வாக்காளர்களில் 1,11,025 ஆண் வாக்காளர்களும், 1,16,497 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியளவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. மொத்தம் இருக்கும் 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஈரோடு சித்தோடு பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை, சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT