/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_222.jpg)
கோபி, சீதம்மாள் காலனி, நாகர் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் (43). இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செந்திலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்துள்ளது. அவரது மனைவியும், மகனும் செந்திலிடம் குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றும் செந்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மாலை குடிபோதையில் மகனை டியூசனுக்கு அழைத்து செல்வதாக கூறினார். அதற்கு அவரது மனைவி வேண்டாம் நானே அழைத்து செல்கிறேன் என்று கூறினார். ஆனால் கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அவரது மகன் தானாகவே டியூஷன் சென்று விட்டார். பின்னர் இரவு அவரது மனைவி டியூசனிலிருந்து மகனை அழைத்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் உள்ள ஒரு அறையில் செந்தில் தூக்கு போட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)