ADVERTISEMENT

பீகார் ரயில் விபத்து; உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் வெளியீடு

07:13 AM Oct 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே ஆனந்த் விஹார் என்ற இடத்தில் இருந்து காமாக்யா நோக்கிச் செல்லும் ரயில் (வண்டி எண் :12506) தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் நேற்று (11.10.2023) இரவு 09.35 மணியளவில் தடம் புரண்டது. விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவக் குழுவினர் விரைந்தனர்.

ரயில்வே போலீசாருடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்த உதவிக்கு வடக்கு ரயில்வே சார்பில் 9771449971, 8905697493, 7759070004, 8306182542 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT