/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download_121.jpg)
பீகார் மாநில முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
பீகார் மாநிலம், தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியில் இளைஞர் படுகொலையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த சாலை வழியாக சென்ற முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனத்தை வழிமறித்து கற்களை வீசியும், உருட்டுக் கட்டைகளைக் கொண்டும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்தன.
எனினும், கான்வாயில் நிதிஷ்குமார் இல்லை என்றும், இது குறித்து விசாரணை நடத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு நடத்தினர்.
அத்துடன், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)