Trains collide and three coaches derail accident!

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 50 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. அந்த மூன்று பெட்டிகளில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சிக்னல் கோளாறால் ஏற்பட்ட இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனவும், காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மகாராஷ்டிரா அரசு சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment