Skip to main content

திருப்பத்தூர் அருகே ரயிலை கவிழ்க்க சதியா?- மோப்ப நாயுடன் குவிந்த பாதுகாப்புப் படையினர்

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

Conspiracy to overturn a train near Tirupattur?- Security forces gathered with sniffer dogs

 

கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த பொழுது தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த பொழுது பச்சகுப்பம் ரயில் நிலையம் அருகே வீரவர்கோயில் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் மற்றும் கான்கிரீட் கலவையால் ஆன சிமெண்ட் கல் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 3.45 மணிக்கு அந்த இடத்தை ரயில் கடந்தபோது தண்டவாளத்தில் கற்குவியல் இருந்ததை ரயில் ஓட்டுநர் அறிந்தார். ஆனால் இருப்பினும் ரயிலை உடனடியாக நிறுத்த முடியாததால் வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பாறாங்கற்கள் மீது மோதியது. இதில் கற்கள் தூக்கி வீசப்பட்டது.

 

கான்கிரீட் கற்கள் மீது ரயில் சக்கரங்கள் ஏறியது. தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகள் கற்கள் மீது ஏறியதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் தூக்க கலக்கத்திலிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர் .தொடர்ந்து பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ஆம்பூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்தில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் இளவரசி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மோப்பநாய் உதவியுடன் பச்சகுப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

காதல் திருமணம்; காவல் நிலையத்தின் முன்பு நடந்த மோதலால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 Excitement due to the previous conflict at the police station for love marriage

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, திம்மம்பேட்டை அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே, இவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் முருகனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த 21 வயதான அபிநயா ஶ்ரீ என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த, பெண் வீட்டார், அந்த பெண்ணிடம் காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த 24 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி பழனி சென்று அங்குள்ள முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் பொள்ளாச்சி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 26 ஆம் தேதி பெண்ணின் பெற்றோர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தனர். 

அவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், காதலர்களின் செல்போனை எண்ணை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து, காதலர்களின் செல்போன் சிக்னலை வைத்து பொள்ளாச்சியில் தங்கியிருந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல் நிலையம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் இருவரும் ஒன்றாக செல்வதாக விருப்பம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.