ADVERTISEMENT

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு புழக்கம்!

01:07 PM Jul 10, 2018 | Anonymous (not verified)


இந்தியாவில் கேரளா, அசாம், பீகார், டெல்லி, கோவா உள்பட 17 மாநிலங்களிலில் லாட்டரி சீட்டுகளை தனியாரும் அரசும் நடத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பல வருடங்களாகவே லாட்டரி சீட்டுக்கு தடை விதித்தின் பேரில் அரசும் தனியாரும் லாட்டரி சீட்டை விற்பது இல்லை. இருந்தாலும் தேனி மாவட்டத்தையொட்டி கேரள இருப்பதால் கேரளாவில் விற்கப்படும் ஸ்ரீசக்தி, வின்வினு, காருன்யா, நிர்மல், பவுர்ணமி உள்பட பல வகையான லாட்டரிகள் போடி மெட்டு, கம்பம்மெட்டு, குமுளி வழியாக தேனி மாவட்டத்திற்கு லாட்டரி வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள் .

இப்படி கேரளாவில் வாங்கி வரும் லாட்டரி சீட்டுகளை கூடலூர், கம்பம், பிளையம், சின்னமனூர், போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் லாட்டரி வியாபாரிகள் பகிரங்கமாகவே விற்பனை செய்து வருகிறார்கள். அதிலும் மஞ்ச பையை கையில் தொங்க விட்டு கொண்டு செல்லும் லாட்டரி வியாபாரிகளோ, அப்பகுதிகளில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களை கூறி வைத்து, அவர்களிடம் பல லட்சம் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி ஒரு லாட்டரி சீட்டு முப்பது ரூபாய் என்றும் ஐந்து லாட்டரி சீட்டுகளை ஒன்றாக சேர்ந்து வாங்க சொல்லியும் வற்புறுத்தி வருகின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கும் கூலித் தொழிலாளர்களும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தங்களுக்கு கிடைக்கும் தினக்கூலி பணத்தில் பாதிக்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனால் பல தொழிலாளர்கள் தங்கள் கூலி பணத்தை முழுதாக வீட்டுக்கு கொண்டு போக முடியாத சூழ்நிலைக்கும தள்ளப்பட்டு வருகிறார்கள். இப்படி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிற விஷயம் காக்கிகளுக்கு தெரிந்தும் கூட அந்த லாட்டரி சீட்டு வியாபாரிகள் போடும் எலும்பு துண்டுக்கு வால் ஆட்டி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்தநிலை தொடந்து நீடித்தால், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மூலம் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். தேனி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வோ மக்களின் நலனுக்காக பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அப்படிப்பட்ட கலெக்டர் இந்த தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT