Skip to main content

ரூ.29 கோடியை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த 28 வயது இந்திய இளைஞர்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி குழுக்கள் மாதம்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதத்திற்கான பரிசை கேரளாவின் செங்கானூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் (28) வென்றுள்ளார்.

 

kerala youth won 29 crores in abudhabi lottery

 

 

ரூ.29 கோடியை பரிசாக வென்ற அந்த இளைஞரை, லாட்டரி நிறுவனம் கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளது. லாட்டரியில் வெற்றிபெற்றது தெரியாமல் இருந்த அந்த இளைஞரை, தீவிர தேடுதலுக்கு பிறகு சமீபத்தில் லாட்டரி நிறுவனம் கண்டுபிடித்தது. துபாயில் பணியாற்றி வரும் ஸ்ரீனு ஸ்ரீதரன் தன்னோடு பணியாற்றும் 21 பேருடன் இணைந்து இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். இதில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழர் ஆவார். பரிசு அறிவிக்கப்பட்டவுடன், அந்த தொகையை தனது நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுகொள்ளப்போவதாக அவர் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது” - அரபு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Indians working in Arab countries have condemned the Manipur issue

 

மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

 

“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று  உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.

 

 

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.