ADVERTISEMENT

பக்ரீத் பண்டிகை; களைகட்டிய பள்ளப்பட்டி ஆட்டு சந்தை! 

04:51 PM Jul 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் அதிகப்படியாக வாழ்வதால் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆட்டு சந்தை நடைபெறும். அந்த வகையில் இன்று (ஜூலை 8) ஆட்டுச்சந்தை நடைபெற்றது.

இதையொட்டி கரூர், அரவக்குறிச்சி, திருப்பூர், காங்கேயம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையே வியாபாரிகள் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். இவற்றை வாங்குவதற்காக பொதுமக்களும் வியாபாரிகளும் என ஆயிரக்கணக்கானோர் சந்தையில் குவிந்தனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்தது.


பொதுவாக இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு ரூ. 12 ஆயிரம் என விற்பனையாகும். ஆனால் பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால், சற்று விலை அதிகரிக்க பத்து கிலோ எடை கொண்ட ஆட்டின் விலை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனைக்கு போனது. இந்தச் சந்தையில் ஜமுனாபுரி என்ற 65 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT