
கோவை மாவட்டம் காரமடை அருகே ஆதிமாதயனூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரப்பன் (49).தனது ஆடுகளைத் தன் வீட்டின் அருகே உள்ள உறவினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில்மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.சிறிது நேரம் கழித்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. அதையடுத்து அங்கு சென்று அவர் பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் ஆடுகளைத் தூக்கிச் செல்வதைப் பார்த்தார்.
உடனேஅக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு,அவர்கள்விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை காரமடை காவல் நிலையத்தில் கொண்டுவந்து பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் ஆடு திருடிய இளைஞனிடம் விசாரணை மேற்கொண்டபோது, கோயம்புத்தூர் பன்னிமடைபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜாமணி (27) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில், தான் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டு, ஆடு திருடுவதே தன் தொழில் என போலீசை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். ராஜாமணி மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர் போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)