Skip to main content

வயாகரா கலந்த நீரை குடித்த ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள்...? உண்மை என்ன ?

Published on 11/12/2019 | Edited on 12/12/2019

அண்மையில் அயர்லாந்தில் வயாகரா கலந்த நீரை குடித்த ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

jk



அயர்லாந்தின் தெற்கு பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் தங்களது செம்மறி ஆடுகள் தொடர்ச்சியாக பாலியல் செயலில் ஈடுபடுவதைக் கண்டு குழம்பம் அடைந்தாகவும், இதனால் அனைத்து ஆடுகளும் பாலியல் வெறி பிடித்ததுபோல் நடந்துகொள்வதாக ஆடு மேய்ப்பவர்கள் தெரிவித்ததாகவும், இதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்ட்டதுபோது சோதனையில் ஆடுகள் குடித்த நீரில் வயாகரா கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் அந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனமானது கேளிக்கை செய்திகளை வெளியிடும் நிறுவனம் என்றும்,  அப்படி அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கேளிக்கை  செய்தி சமூக வலைதளங்கள் மூலமாக பரவி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடிய இருவர் கைது

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

 Two arrested for stealing a goat on a two-wheeler

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மாலை வேளையில் வந்த இருவர் ஆட்டை திருடிச் சென்றதாக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மாட்டுவேலம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவர் அவருடைய தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அத்தனூரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆட்டை திருடியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வெண்ணந்தூர் காவல் நிலைய போலீசார் சர்மா, லோகேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.