ADVERTISEMENT

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி வழக்கில் தீர்ப்பு முழு விபரம்!

09:18 PM Feb 03, 2020 | Anonymous (not verified)

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து சென்னை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தக் குடியிருப்பில் பணிபுரிந்த வாட்ச்மேன், பிளம்பர், லிப்ட் ஆப்பரேட்டர், தோட்டக்காரர், எலக்ட்ரீசியன், வீட்டு வேலை செய்பவர் என ( ரவிகுமார், சுரேஷ், ராஜசேகர், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ) 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.

இவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த போதிலும், 17 பேருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை.



இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறை 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது, அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும், குற்றவாளிகள் தரப்பில் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, அதுதொடர்பான 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகள் அனைத்தும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி இந்த வழக்கில் தோட்டக்காரர் குணசேகரன் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். அதன்படி லிப்ட் ஆப்ரேட்டர் ரவிகுமார் உள்ளிட்ட 4 பேருக்கு வாழ் நாள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 9 பேருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் எந்த அபராதத் தொகையும் விதிக்கவில்லை.

குற்றவாளிகள் 17 பேருக்கான தண்டனை விவரம் பின்வருமாறு -


ஆயுள் தண்டனை பெற்றவர்கள்:

ரவிகுமார்( 56) லிப்ட் ஆபரேட்டர் - வாழ் நாள் சிறை தண்டனை

சுரேஷ் (32) பிளம்பர் - வாழ் நாள் சிறை தண்டனை

அபிஷேக் ( 28)செக்யூரிட்டி - வாழ் நாள் சிறை தண்டனை

பழனி(40)செக்யூரிட்டி வாழ்நாள் சிறை தண்டனை

ராஜசேகர்(48) வீட்டு வேலை செய்தவர் - ஆயுள் தண்டனை


சிறைதண்டனை பெற்றவர்கள்:


எரால்பிராஸ்(58)செக்யூரிட்டி - 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சுகுமாரன் (60) செக்யூரிட்டி- 5 ஆண்டுகள் சிறை தண்டனை

முருகேசன்(54)செக்யூரிட்டி - 5 ஆண்டுகள் சிறை

பரமசிவம் (60)லிப்ட் ஆபரேட்டர்-5 சிறை தண்டனை

ஜெய்கணேஷ் (23)பிளம்பர்- 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தீனதயாளன்(50)லிப்ட் ஆப்ரேட்டர் - 5 ஆண்டுகள் சிறை

ராஜா (32)பிளம்பர் - 5 ஆண்டுகள் சிறை

சூர்யா(23)பிளம்பர்- 5 ஆண்டு சிறை

ஜெயராமன்(26)வீட்டு வேலை செய்தவர் - 5 ஆண்டு சிறை

உமாபதி(42)எலெக்ட்ரீசியன்/ லிப்ட் ஆபரேட்டர் - 5 ஆண்டு சிறை

மேற்கண்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடந்த 20 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT