Skip to main content

அயனாவரம் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020
a

 

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.  குற்றம் சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் குற்றவாளியாக அறிவித்தது  நீதிமன்றம்.

 

ay

 

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, அதே குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி பழனி (வயது 40), பிளம்பர் ஜெய்கணே‌‌ஷ் (23), லிப்ட் ஆபரேட்டர்கள் தீனதயாளன் (50), பாபு (36) உள்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.  இதுதொடர்பாக அயனாவரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூலையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பின்னர் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 2019 ஜனவரி 11-இல் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. 

 

இதன்பின்னர் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

 

இந்த வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் இறந்து விட்டதால் 16 பேர் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.  இன்று,  குற்றம் சாட்டப்பட்டவர்களில் குணசேகரன் ஒருவரைத்தவிர மற்ற அனைவரையும் குற்றவாளியாக அறிவித்தது  நீதிமன்றம்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து; வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; அயனாவரத்தில் பரபரப்பு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

A house fire; cylinder incident in Ayanavaram

 

சென்னை அயனாவரத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயனாவரம் மேடவாக்கம் குட்டியப்பன் தெருவில் தனசேகர் என்பவர் வீட்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாக நான்கு தளங்கள் இந்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

 

கீழ்பாக்கம், அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீச்சி அடித்து தீயணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் விடுதி சிதறியது. இதில் முதல் தளத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்தது. இந்த விபத்தால் அருகிலிருந்த வீட்டின் கட்டிடங்களும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

Next Story

கரோனா பாதிப்பு- அயனாவரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

chennai ayanavaram area minister inspection coronavirus prevention


சென்னையில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அயனாவரத்தில் ஆய்வு செய்தார். மேலும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் கபசுர குடிநீரை வழங்கினார். இந்த ஆய்வின் போது அமைச்சருடன், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
 


ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தனி மனித இடைவெளி மிகப்பெரிய சவாலாக உள்ளது; தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா இல்லாத திரு.வி.க.நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். கரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையையும் மாற்ற முடியும்." என்றார். 
 

chennai ayanavaram area minister inspection coronavirus prevention


தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "சென்னையில் கரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் கரோனா வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திரு.வி.க. நகர் பகுதிகளில் கடந்த 14 நாட்களாகத் தொற்று இல்லாத பகுதிகளும் உள்ளது. தொற்று உள்ள தெருக்களில் மேலும் கரோனா பரவாமலும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.