/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/court322.jpg)
கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த தம்பதி சுரேஷ்- கற்பகவல்லி. கடந்த 2015- ஆம் ஆண்டு குடும்ப தகராறில் ஆறு மாத கர்ப்பமாக இருந்த மனைவி கற்பகவல்லியை அவரது கணவர் சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றவாளியான கணவர் சுரேஷை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிட்டும், 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)