
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்பட்டுள்ளவர்களில் 16 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுள்ளது.
சென்னை அயனவரத்தில் பள்ளி சிறுமி அபார்ட்மெண்ட் ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து தங்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்க வேண்டும். ஜாமீனில் வெளிவிட வேண்டும் என கைது செய்யப்பட்ட 17 பேர்களில்ஒருவரை தவிர மற்ற 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இன்று நடந்த இந்த வழக்கின் இறுதி வாதத்தில், சட்டமுறைப்படி குண்டர் சட்ட நடவடிக்கை பிறப்பிக்கப்படவில்லை எனவே சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு 16 பேருக்குவிதிக்கப்பட்ட குண்டர் தடுப்பு நடவடிக்கையை ரத்து செய்வதாகஉத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)