ADVERTISEMENT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா! 

01:39 PM Jul 31, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு' உள்ளிட்டப் பெயர்களில் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு கூடுதலாக மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படும் என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வெ.நாராயணசாமி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 84 சான்றோருக்கு இதுவரை இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், 2022- ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று (30/07/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்றது. இதில் அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைவுக்கும், காமராசர் கதிர் விருது விஜிபி உலக தமிழர்கள் கட்சி தலைவர் வி.ஜி.சந்தோசம்வுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சி.செல்லப்பனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ.யின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு விருது, தொல்லியல் அறிஞர் கா.இராசனுக்கும், மார்க்ஸ் மாமணி எழுத்தாளர் இரா.ஜவகருக்கும் வழங்கப்பட்டது.


விழாவில் பேசிய டெல்லி மாநில அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம், "நாட்டில் 90% மக்கள் அடிமையாகவே உள்ளார்கள். புதிய கல்வி கொள்கை என்பது மருத்துவம மற்றும் அனைத்து துறைகளிலும் தேக்கி வைத்துள்ளனர். மத்திய அரசே கல்வி விலையை அதிகரித்து உள்ளது. ஒரு குழந்தை படிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகின்றது. மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியார்துறைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. சாதி பிரச்சனை தான் வன்கொடுமைகளுக்கு காரணம் , மத்திய அரசு உண்மையை பேசுபவர்களை சிறையில் தள்ளி வருகின்றது" என தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசுகையில், "சித்தராமையாவும் , திருமாவளவனும் சமூக நீதியில் சமரசத்திற்கு இடம்
தராமல் இருப்பவர்கள். எங்களுக்கும் வி.சி.க.வுக்கும் பல்வேறு விஷயத்தில் எதிர் எதிர் கருத்து இருக்கும் அவையெல்லாம் மீறிய ஒரு உறவு இருக்கு என்றால் அது தான் சமூக நீதி. ராகுல்காந்தியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர் திருமா. தேசிய இயக்கத்துடன் திருமாவளவனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு" என தெரிவித்தார்.


கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வேறு ஒரு சாதியை சேர்தவர்களுக்கு ஏன் இது வரை பொறுப்பு வழங்கவில்லை. இது அடிப்படை உரிமை அதற்காக தான் அம்பேத்கர் சொன்னார் சாதி உள்ளவரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 10% உயர் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ள மத்திய அரசு இது நியாயமா?

இதுக்காக கொண்டு வரும் சட்டங்களை ஒரே நாளில் ராஜ்யசபா, மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. பா.ஜ.க. கட்சி இன்றும், நாளையும் மக்களைப் பாதுகாக்கும் கட்சி அல்ல. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை. அம்பேத்கர் பிறக்காவிடில் நமக்கு இத்தனை சட்டங்கள் நமக்கு கிடைத்து இருக்குமா? தமிழ்நாட்டை தந்தை பெரியார், காமராஜர் கட்டமைத்து உள்ளனர் .தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சி செய்கின்றார். அவருக்கு என்னுடைய வேண்டுகோள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாநில பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என கேட்கின்றேன்.


மத்திய அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இருந்தால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்குங்கள் என்று
கேட்கின்றேன். தமிழக வந்த பிரமர் மோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் வேலை வாய்ப்பு இன்மை பற்றி வாய் திறக்கவில்லை" எனத்
தெரிவித்தார்.

இறுதியாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., "கர்நாடக மாநில திராவிட இயக்க தலைவர் சித்தராமையா அவர்களே, ஏன் இவர் பிரதமராக வர கூடாது. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியைத் தேர்வு செய்யலாம். ஆனால் சித்தராமையா கொள்கையும், பேச்சையும் பார்க்கும் போது இவர் பிரதமராக வர வேண்டும் என்பதை நினைக்கின்றோம்.

இதனை பத்திரிக்கையாளர்கள் தவறாக எடுத்து கொண்டு திரித்து எழுதக் கூடாது. ஒட்டு மொத்த தேசத்திற்கும் எதிரானவர்கள். பா.ஜ.க.அரசியலமைப்புச் சட்டத்தை தான் எதிர்க்கின்றனர். மூட நம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைத் தடுப்பதற்காக கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த போது சித்தராமையா சட்டம் கொண்டு வந்து இருக்கின்றார். ஆனால் அது தமிழகத்தில் தான் தான் முதலில் கொண்டு வந்து இருக்க வேண்டும். தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்கும் சக்தி காங்கிரஸுடன் இணைந்தால் மட்டும் தான் சாத்தியம்" எனத் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT