Skip to main content

குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து சிபிஎம் சார்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. கே.எம். ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேரா. காதர் மொய்தீன், இந்து குழுமத்தின் தலைவர் திரு. என். ராம், மூத்த வழக்கறிஞர்கள் திரு. என்.ஜி.ஆர். பிரசாத், திருமிகு. ஆர். வைகை, மூத்த ஊடகவியலாளர் திரு. ஜென். ராம், சமூக செயற்பாட்டாளர் பேரா.அ.மார்க்ஸ், ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் திரு. ஆர். விஜயசங்கர், கல்வியாளர் திரு. தாவூத் மியாகான் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். 

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech


இதில் பேசிய கே.பாலகிருஷ்ணன் குடியுரிமை வழங்குவதற்கு மதம் தான் அளவு என்றால் இந்தியாவின் நிலை என்னாவது. இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவின் ராஜபக்சேவாக மோடி மாறி உள்ளார். மோடி அரசாங்கத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

அதனை தொடர்ந்து திராவிட கழகம் கலி. பூங்குன்றன் பேசுகையில், இந்த பாஜக ஆட்சியை இந்த நாட்டை விட்டு விரட்டுவதே நமது ஒரே பரிகாரம் என்று நான் கருதுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காரணத்தினால் இந்த திட்டத்தை இன்று நிறைவேற்றி உள்ளார்கள். அதற்கு இங்கு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியும் உதவி வருகிறது, அண்ணாவையும், திராவிடத்தையும் பெயரில் வைத்துக் கொண்டு இத்தகைய செயலை செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்பதே ஆகும்.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "மிகப்பெரிய அரசியல் மோசடி இன்று நடைபெற்று வருகிறது. பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை திசை திருப்ப இந்த திட்டதை மோடி கொண்டு வந்திருக்கிறார். இரண்டாவது சுதந்திர போராட்டத்தை போல் இந்த போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது. வழக்கம் போல் பழிப்போடுகின்ற இந்த அரசாங்கம் பேருந்துகளை அவர்களாகவே கொளுத்தி விட்டு பழிப்போடுகிறார்கள். 250 பேர் அமரக்கூடிய நாடாளுமன்ற அவையில் 120 ஆதரவாக, 105 பேர் எதிர்த்து வாக்களித்தனர் வெறும் 15 தான் வித்தியாசம்.

citizenship amendment bill 2019 chennai chepauk oppose parties leaders speech

அன்புமணி ராமதாசை பெரிதும் மதிப்பவன் நான், அன்புமணி ஒருநாள் கூட பாராளுமன்றத்திற்கு வரவில்லை. பதவி ஏற்று சென்றதோடு சரி அதோடு வாக்களிக்க மட்டும் வந்தார். மனசாட்சியோடு வாக்களித்திருந்தால், கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் பயடைந்திருப்பார்கள். இந்த பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பிறகு மனிதனை கடிக்கும் நிலை வந்துவிடும். இந்த பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் நிச்சயமாக அதில் வெற்றி பெறுவோம்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.