ADVERTISEMENT

அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை: வீடியோ ஆதாரத்தை தாக்கல் செய்தது தமிழக அரசு!

09:06 PM Jul 24, 2018 | Anonymous (not verified)


அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவை தன் தாய் என கூறி மரபணு சோதனை நடத்தவும், ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுத்து வைணவ முறைப்படி சடங்கு நடத்த அனுமதிக்க கோரி பெங்களுரை சேர்ந்த அம்ரூதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான இறுதி விசாரணை இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரனைக்கு வந்த போது, "அம்ரூதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை தொடர்ந்து தனக்கு உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்றார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரி இருந்தார். ஜெயலலிதாவுடன் ஜெயக்குமார், சைலஜா ஆகியோர் உடன் பிறந்தவர்கள். சந்தியாவின் கணவர் இறந்த பின்புதான் பிறந்த சைலஜா பெங்களூரில் வளர்ந்தார். அம்ருதாவை சைலஜாதான் ரகசியமாக வளர்த்தார். சைலஜா இறந்தபின்பு அவரது கணவர் சாரதி இறக்கும் தருவாயில்தான் ஜெயலலிதா தான் தாய் என அம்ருதாவிடம் கூறினார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய கூட தேவையில்லை, வேண்டுமென்றால் அம்ருதா ரத்தத்தையும், ஜெயலலிதாவின் ரத்த உறவுகளாக இருக்கும் தீபா, தீபக் ஆகியோரின் ரத்த மாதிரிகளை கொண்டு மைட்டோ காண்டிரியா முறையில் ஹைதராபாத்தில் டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட்டால் உண்மை வெளிவரும் என்று கூறி வாதங்களை முடித்தார்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஜெயலலிதா தனது சகோதரி போட்டியளித்த சைலஜா மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே அவதூறு தாக்கல் செய்துள்ளார். அம்ரூதாவின் மனுவில் கூறப்பட்ட அனைத்தும் கற்பனையானவை. சொத்துக்களை பறிக்கும் நோக்குடன் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

’1980 ஆக்ஸ்ட் மாதம் அம்ரூதா பிறந்தாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூருவில் பிலிம்பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா கலந்து கொண்டதற்கான ஆதாரம் உள்ளதாக வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தார்’. சமூகத்தில் மதிப்பு மிக்க தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடர்ப்பட்டுள்ளது. இறந்த தலைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என வாதிட்டார்.

1996ஆம் ஆண்டு முதல் 2016 வரை பல தருணங்களில் ஜெலலிதாவை சந்தித்தாக கூறும் அம்ரூதா அதற்கு ஆதராமாக ஒரு புகைப்படத்தை கூட தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அம்ரூதா கூறும் அனைத்து சாட்சிகளும் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையவே கற்பனையான சோடிக்கப்பட்ட இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்தில் குற்றம்சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஜெயலலிதா மரணம், சைலஜா சகோதரி என்பதும் கேள்விக்குறி, அம்ருதாவுக்கு ஆதாரமான சாட்சியங்களும் கேள்விக்குறி, என இப்படி எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்த நீதிபதி, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT