/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk-stalin2_1.jpg)
கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக நிதிப்பிரச்சனையைசீரமைத்த பின் மகளிருக்கான 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறினார்.
திருமண விழாவில் பேசிய அவர் "திராவிடமுன்னேற்றக்கழகத்தின் ஆட்சி அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்தது அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியால் ஆறுமுகசாமி தலைமையில் ஒருஆணையம் ஒப்புக்காக அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தை முறையாக நடத்திஅறிக்கையைப்பெற்று அதன் மேல் முறையான நடவடிக்கை எடுக்கப்படும்எனத்தேர்தல்வாக்குறுதியாகக்கொடுக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு முன் நீதிபதி ஆறுமுகசாமியால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவை அனைத்தும் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றப்படும்.
அரசு மாநகராட்சி பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். செப் 5ல்அதைத் தொடங்கிவைக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருகை தர இருக்கிறார். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு 1000 வழங்கும் திட்டமும் அன்று நிறைவேற்றப்பட இருக்கிறது. மாதம் ஆயிரம் கொடுப்பதாகச் சொன்ன உரிமை தொகை என்ன ஆகிற்று என சில தாய்மார்கள் கேட்டனர். கண்டிப்பாக வரும். நிதியைச் சரிசெய்து கொண்டிருக்கிறோம். ஓரளவு சரி செய்த பின் நிச்சயமாக அதையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)