ADVERTISEMENT

"விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர் அதிரடி!

10:25 AM Feb 10, 2020 | Anonymous (not verified)

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இதற்கு இயக்குனரும் ஃபெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி, "மாஸ்டர் படப்பிடிப்பிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது முறையற்றது. அரசு அனுமதியோடு படப்படிப்பு நடக்கும் போது, 25 வருடத்திற்கு முன்பு அரவிந்தன் படத்தில் பிரச்சனை ஏற்பட்டது என கூறி தற்போது போராட்டம் நடத்துவது சரியில்லாத காரணம்" என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு விஜய் எதிராக இருப்பார் என பாஜக நினைத்திருக்கலாம், அதனாலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது. அவரது படப்பிடிப்பு தளத்தில் போராட்டம் நடத்தியது கண்டனத்துக்கு உரியது. விஜய் அரசியலுக்கு வருவதை தமிழனாக வரவேற்கிறேன் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT