/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bv_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மூன்று முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், மதுரை எய்ம்ஸ்மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வரும் ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வர உள்ளதாக கூறினார். மேலும்பிப்ரவரி10 மற்றும் 19ம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் எனவும் கூறினார்.
அரசியல் வரலாற்றை நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்றால்ஊழல் குற்றச்சாட்டு இருக்கும், இந்த நாட்டிற்கு எதிரானவராக நடந்திருப்பார்கள், இந்த நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாதவர்களாக இருந்திருப்பார்கள், பதவியாசை பிடித்தவர்களாக இருப்பார்கள், சுயநலவாதிகளாக இருப்பார்கள் அதனால் இன்று நாடு மறுபடியும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தேஆகவேண்டும்.
சகோதரர் ஸ்டாலின் சென்னையில் பேசும்பொழுது ராகுல் தான் பிரதம மந்திரி என கூறினார். ஆனால் அதை கல்கத்தாவில் சொல்ல முடியவில்லை. அவர்களின் அணி அப்படித்தான் இருக்கும். ஆனால் எங்களது அணி அப்படி அல்ல நாட்டு மக்களுக்கான அணி எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)