ADVERTISEMENT

கேள்வி கேட்டதற்கு அறை... திமுகவில் சேர்ந்த அதிமுக தொண்டர்

08:36 PM Apr 04, 2019 | elayaraja

சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் அருகே உள்ள அக்கரையானூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). அதிமுக பிரமுகர்.

ADVERTISEMENT

கடந்த 31ம் தேதி, சிந்தாமணியூரில் தர்மபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி பரப்புரை செய்வதற்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை ஆகியோர் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த அய்யா இப்போது அதிமுகவோடு கூட்டணி வைத்தால் எப்படிங்க அய்யா? என்று கேள்வி எழுப்பினார். இதை சகித்துக்கொள்ளாத செம்மலை எம்.எல்.ஏ தன் சொந்தக் கட்சி தொண்டர் என்றும் பாராமல் பலர் முன்னிலையில் கேள்வி கேட்ட நபரை கன்னத்தில் பளார் பளார் என இரண்டுமுறை அறைந்தார். அதன் பின்னர் கட்சியினரும் போலீசாரும் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விசாரணையில் அந்த நபர் சிந்தாமணியூர் அருகே உள்ள செந்தில்குமார் என்பதும், தீவிர அதிமுக தொண்டர் என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே அவர் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இது குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் கொல்லப்பட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. போலீசாரும் என் வீட்டிற்கு வந்து நான் இல்லாதபோது விசாரித்துவிட்டு சென்றனர். பலர் முன்னிலையில் என்னை செம்மலை எம்.எல்.ஏ அடித்து அசிங்கப்படுத்தி விட்டார். எனக்கு ஒருபோதும் மதுப்பழக்கம் கிடையாது. ஆனால் நான் குடித்துவிட்டு ரகளை செய்ததாக செம்மலை கூறியது கண்டிக்கத்தக்கது.

நான் என் ஆதரவாளர்களுடன் திமுகவில் சேர முடிவு செய்துவிட்டேன். அதிமுகவில் என்னைப்போல விசுவாசமான தொண்டர்கள் எல்லோரும் அம்மா மறைவுக்குப் பின்னர் அனாதைகளாகி விட்டோம்," என்றார்.

இந்நிலையில், இன்று (4.4.2019) மாலை 3.30 மணியளவில் செந்தில்குமார் தன் தோட்டத்தில் அதிமுகவை சேர்ந்த 400 ஆதரவாளர்களுடன் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT