ADVERTISEMENT

மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விவேக் கூறிய அறிவுரை!

02:57 PM Feb 08, 2020 | Anonymous (not verified)

விழுப்புரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 7ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் விவேக் மாணவ-மாணவிகளுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அப்போது, "2008 ஆம் ஆண்டு கிரீம் கலாம் என்ற திட்டத்தை துவக்கி 2009 ஆம் ஆண்டு முதல் மிகத்தீவிரமாக மரக்கன்று நடும் பணிகளை தொடர்ந்து செய்து வந்தோம். இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, இதில் 80 சதவிகிதம் வளர்ந்து மரங்கள் ஆகி உள்ளன.

பொதுமக்கள் அவரவர் பகுதியில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி செப்பனிட்டு மழைநீர் தேங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் வரும் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும் வருங்கால சந்ததிகள் தண்ணீருக்கு சிரமப்படக் கூடாது. எனவே தொலைநோக்கு பார்வையுடன் பொதுக் மக்கள் ஆர்வமுடன் முன்வந்து செய்ய வேண்டும். இதற்காக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களை அதற்காக ஒதுக்கி பணிகளை செய்யலாம்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT