கடந்த வருடம் அரசு ஆசிரியர் பகவானுக்கு பணியிட மாற்றம் வழங்கிய போது அந்த பள்ளியின் மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுது அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.அரசும் அந்த கோரிக்கையை ஏற்று அவரை அதே பள்ளியில் மீண்டும் பணியில் அமர்த்தியது அந்த நிகழ்வு அணைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளி வந்தது. இந்த நிலையில் ஆசிரியர் பகவான் மீது புகார் ஒன்று வந்துள்ளது அதை அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொம்மராஜப்பேட்டையைச் சேர்ந்தவர் பகவான். இவர் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளியகரத்தில் பணியாற்றியபோது பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Advertisment

teacher

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்போது இவரை அந்த பள்ளியில் இருந்து பணியிடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளி மாணவ, மாணவிகள் கதறி அழுதனர். இதனால் ஆசிரியர் பகவான் தமிழக அளவில் மிக பிரபலம் அடைந்தார்.இந்த நிலையில் ஆசிரியர் பகவான், வெள்ளியகரம் ஊரைச்சேர்ந்த நாதமுனி என்பவர் மகளை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாகவும் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த புகாரின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆசிரியர் பகவானை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த புகாரில் எவ்வளவு உண்மை தன்மை இருக்கிறது என்றும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.