ADVERTISEMENT

ஒரு மாதத்திற்கு பிறகு அபிராமியும், சுந்தரமும் நேருக்கு நேர் சந்திப்பு!

02:44 PM Sep 30, 2018 | rajavel


ADVERTISEMENT

சென்னை அருகே குன்றத்துார், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இவருக்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் மற்றும் கார்னிகா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

ADVERTISEMENT

விஜய் குடும்பத்துடன் அவ்வப்போது குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று மனைவிக்கும், குழந்தைகளுக்கும் விரும்பியவற்றை வாங்கி கொடுப்பார். அப்போது அந்த பிரியாணி கடையில் வேலை பார்த்த சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, தனது குழந்தைகள் மற்றும் கணவனுக்கு பாலில் விஷம் கலந்தார். இரவு படுப்பதற்கு முன்பு இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார். பாலில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் குழந்தைகள் இரண்டு பேரும் குடித்தனர். அன்றிரவு கணவன் விஜய் வராததால் அவர் மட்டும் தப்பினார். காலையில் வந்த விஜய், தனது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்த கதறினார்.

விஜய்யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன், அபிராமியை தேடினார்கள். சுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை, நாகர்கோவிலில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன் சுந்தரத்தையும், ஒரே வாகனத்தில் வெள்ளிக்கிழமை அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

இருவரின் நீதிமன்ற காவலை, வரும்,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, அபிராமியும், சுந்தரமும் மீண்டும் புழல் சிறைக்கு ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர். ஒரே வேனில் வந்த போதிலும், இருவரும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியபோது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டனர். அபிராமி துப்பாட்டாவால் முகத்தை மூடியபடி சோகத்துடன் இருந்தார். அப்போது அபிராமி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் சுந்தரம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT