பிக்பாஸ் சீஸன் 3-இல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம். இதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த அபிராமி, சில விளம்பரப் படங்களிலும், சினிமாவில் வாய்ப்பு தேடியும் வந்தார்.

Advertisment

tiktok

பிக்பாஸில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஒருசில படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், அபிராமி டிக்டாக்கிலிருந்து வெளியேறுவதாகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். “என் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்தி டிக்டாக்கில் உலா வரும் ஃபேக் ஐடிகளால் உண்மையான ஐடியை டெலிட் செய்யப்போகிறேன். இதேபோலதான் ட்விட்டரிலும் நடந்தது. இன்ஸ்டாகிராமில் என்னுடைய அக்கவுண்ட் வெரிஃபைட் என்பதால் இதை பயன்படுத்துகிறேன். என்னை இன்ஸ்டாகிராமில் மட்டும் பின் தொடருங்கள் மற்ற எந்த சமூக வலைத்தளத்திலும் அக்கவுண்ட் இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.