Skip to main content

’விஷத்தில் குழந்தைகள் உயிர்தப்பிவிடுவார்கள் என நினைத்து  கழுத்தை நெரித்து கொன்றேன்’ - அபிராமி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
ab

கைது செய்து காரில் அழைத்து  வரப்படும் அபிராமி

 

பெற்ற தாயே தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,  எங்கே அவர்கள் விஷத்தில் சாகாமல் உயிர்தப்பிவிடுவார்களோ என்று நினைத்து அக்குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் குன்றத்தூரில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

 

சுந்தரம் என்ற இளைஞருடனான நெருக்கத்தின் காரணமாக பாலில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு காதலன் சுந்தரத்துடன் திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு தப்பிச்செல்லும் முயற்சியில் இருந்தபோது கைதான அபிராமியிடம் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சுந்தரம்

s


 குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில்  வாடகை வீட்டில் வசித்து வருகிறர் விஜய் (30). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் இவர் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி அபிராமி (25). இத்தம்பதிக்கு  அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  இந்நிலையில்,  வங்கியில் திடீரென அமைந்துவிட்ட இரவுப்பணி முடிந்து நேற்று காலையில் விஜய் வீட்டிற்கு வந்தபோது,  அங்கே தன் இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.  மனைவி அபிராமியை காணவில்லை.  அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை.  இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே,  குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான சுந்தரம் என்பவரை விசாரித்தபோது,  கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.  விஜய் அன்று இரவு வராததால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்து அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிந்ததும் வீட்டில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிவிட்டார் என்று தெரியவந்தது.

 

இதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு நேற்று இரவு சென்றனர்.  சென்னையில் கைதான சுந்தரத்தையும் உடன் அழைத்துச்சென்றனர்.  காதலன் மூலமாக அபிராமியை பிடிக்க வலை விரித்தனர் போலீசார்.  அதன்படி, செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அபிராமி பேருந்து நிலையத்தில் பிடிபட்டார்.  நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை,  கைது செய்த போலீசார்  அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குன்றத்தூர் போலீசாரின் விசாரணையில்,  ‘’பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன்.  கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்.  அன்று இரவு அவர் வங்கியில் பணிச்சுமையினால் வராததால் உயிர் தப்பிவிட்டார்.   சுந்தரத்துடன் கேரளாவுக்கு சென்று  அங்கேயே ஏதாவது கடை வைத்து வாழலாம் என்று  திட்டமிருந்தேன்.  அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டேன்’’ என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞர் படுகொலை; சினிமா பாணியில் சேசிங் - குற்றவாளிகளை சுற்றி வளைத்த போலீஸ் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Police arrested 6 people in the case of youth    in Kundrathur

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(50), இவரது மகன் நிஷாந்த்(25), லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன் கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் நிசாந்தை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அஜித்(24), அவரது தம்பி கவியரசு(22) மற்றும் இவர்களது நண்பர்கள் எனத் தெரிய வந்த நிலையில் கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருந்தவர்களை இருசக்கர வாகனத்தில் சினிமா பட பாணியில் சேசிங் செய்து அஜித், கவியரசு, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு அஜித் மற்றும் நிஷாந்த்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அஜித்தை நிஷாந்த் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் நிசாந்த் சிறைக்குச் சென்று வெளியே வந்த நிலையில், இருவருக்கும் இடையே பகையானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிஷாந்தை கொலை செய்யத் திட்டம் தீட்டி தனியாக இருந்த நிஷாந்தை அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு அன்றைய இரவு சோமங்கலத்தில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளனர். பின்னர் அதிகாலையில் எழுந்து மாமல்லபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 

தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தபோது, நீதிமன்றத்தில் சரண் அடையச் செல்வது தெரிய வந்த நிலையில் போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர். சினிமா பட பாணியில் போலீசார் சேசிங் செய்து அவர்களை அங்கேயே மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அஜித் அவரது தம்பி கவியரசு இவர்களது அண்ணன் தியாகராஜன், நண்பர்கள் கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏரியாவில் யார் பெரிய ஆளாக வலம் வருவது மற்றும் இருவருக்கும் இடையேயான முன் விரோதம் ஆகியவற்றால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியதும், இந்த கொலை சம்பவத்தில் ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் பிடிக்கும்போது தப்பி ஓடியதில் அஜித், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.