ADVERTISEMENT

2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள்; வேதாரண்யத்தில் தீவிர விசாரணை

08:25 AM Jan 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கை பகுதிக்கு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்குப் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை கல்வெட்டி காவல்துறையினரிடம் புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் ரோந்து பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் ஆட்டோவை முழுமையாக சோதனை செய்த போது அதில் இரண்டு கிலோ ஐஸ் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் 18,000 ரூபாய் இலங்கை பணமும் இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதைப் பொருளானது வேதாரண்யம் பகுதியிலிருந்து பைபர் படகின் மூலமாக இலங்கை பகுதிக்குக் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT