/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sea_4.jpg)
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இரும்பு கம்பி, வீச்சருவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு இலங்கை மீனவர்கள் தாக்கியதாக தகவல் கூறுகின்றன. இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்ததால் மீனவர்கள் கோபி என்பவர், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.
மேலும் தமிழக மீனவர்களின் 600 கிலோ வலை, 20 லிட்டர் டீசல், ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவைகளை இலங்கை மீனவர்கள் பறித்து விரட்டியடித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)