ADVERTISEMENT

கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி... இளைஞர் மீது வழக்கு!

07:09 PM Jun 16, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளியில் படிக்கும்போதே அச்சிறுமியை இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார் ராஜபாண்டி. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆத்திரத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஏனென்றால், அச்சிறுமிக்கு ஒரு அக்காவும், தங்கையும் இருக்கின்றனர். அவர்களது எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலைப்பட்டனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரும் ராஜபாண்டியின் பெற்றோரும் கலந்து பேசி, கடந்த 30-8-2021 அன்று ராஜபாண்டியின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராஜபாண்டியும் அச்சிறுமியும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வந்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்துவந்த அச்சிறுமியை, 9 மாத கர்ப்பிணியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைக்க, பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற்று, சிறுமியின் அம்மா, அப்பா, கணவர்(?) ராஜபாண்டி, அவருடைய அம்மா, அப்பா பொன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் குழந்தைத் திருமணம்தான். ஆனால், புகாரளித்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி. இவருடன் பணியாற்றும் உறுப்பினர் பாண்டீஸ்வரிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மூலம், சிறுமி ஒருவருக்கு நடந்த குழந்தைத் திருமணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்தச் சிறுமி உள்ளூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-வது வகுப்பு படிக்கிறார். தனது உறவினர் குருசாமியின் மகன் சுரேஷ்குமாரிடம் காதல் வயப்பட்டிருக்கிறார். 4 மாதங்களுக்குமுன் சுரேஷ்குமார், காதலியான அச்சிறுமியிடம் ‘நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்..’ எனக் கூறி, நெருங்கிப் பழகியிருக்கிறார். அதனால், அச்சிறுமி மூன்று மாத கர்ப்பமடைய, கடந்த ஜூன் 3-ஆம் தேதி, திருவண்ணாமலை – நரிப்பாறையில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.

விசாரணையின் முடிவில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கிய சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரியும் அவருடன் பணியாற்றுபவர்களும் சேர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகாரளிக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT