Skip to main content

நீ என்ன திருடனா? ஒழுங்கா உன் வீட்டிலுள்ள என் ஃபிங்கர் பிரிண்ட்ட அழித்திடு... சுஜி வழக்கில் மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்கள்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

suji



“ஒண்ணா? ரெண்டா? சுஜியால சீரழிஞ்ச பெண்களோட எண்ணிக்கை 90-க்கும் மேல இருக்கும். அவனோட செல்போனும் லேப்டாப்புமே இதைக் காட்டிக் கொடுத்திருச்சு. இந்த அளவுக்கு மோசமா நடந்தவன் வாயில இருந்து உண்மை எப்படி வெளிவரும்?

"அந்தப் பெண் டாக்டர் என்னை எப்பல்லாம் கூப்பிடுவாங்களோ, அப்பல்லாம் போனேன். பணமும் கொடுப்பேன். அப்புறம் என்னால பணம் கொடுக்க முடியல. ரொம்ப மிரட்டினாங்க. அவங்க சொன்னதுக்கு நான் உடன்படல. அந்தக் கோபத்துலதான் என் மேல பொய் புகார் கொடுத்திருக்காங்க'ன்னு வாய்க் கூசாம கோர்ட்ல பொய் சொல்லியிருக்கான்.’’


சுஜி என்றால் பயம்! 

அந்த டாக்டர் விவகாரத்தை அறிந்த காவல்துறை அதிகாரி ஒருவர், "புகார் கொடுக்கிற பெண்களை இப்படி அசிங்கப்படுத்திட்டா, வேற யாரும் புகார் கொடுக்க வரமாட்டாங்கள்ல. இத்தனைக்கும் அந்த டாக்டருக்கும் அவனுக்கும் அந்த மாதிரி உறவே நடக்கல. அவங்களயே இப்படிச் சொல்லிட்டான். நம்மள என்ன சொல்லப் போறானோன்னு மற்ற பெண்களுக்கு பயம் வந்திரும்ல. அப்புறம் எப்படிப் புகார் கொடுப்பாங்க? இங்கே இருக்கிற வக்கீல்கிட்ட சென்னையில காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கிற ஒரு பொண்ணு பேசிருக்கு. தைரியமா புகார் கொடும்மான்னு அவரு சொல்லிருக்காரு. அந்தப் பொண்ணுக்குச் சொந்த ஊரு திருநெல்வேலி போல. அங்கேயிருக்கிற வக்கீல் ஒருத்தர்ட்டயும் பேசிருக்கு. அப்ப வக்கீல் சொல்லிருக்காரு. "இதுக்கெல்லாம் பெரிசா தண்டனை கிடைக்காது. நீ ஏன் தேவையில்லாம மாட்டிக்கிற' என்றிருக்கிறார். அந்தப் பொண்ணு இந்த வக்கீலுக்கு போன் பண்ணி, "கம்ப்ளைண்ட் வேணாம் சார். இனி அவனால எனக்குப் பிரச்சினை வராதுன்னு நல்லா தெரிஞ்சு போச்சு. அதுவரைக்கும் சந்தோஷம்''னு சொல்லிட்டு கட் பண்ணிருச்சாம்.
 

suji


நீலம் படர்ந்த சுஜியின் கடந்த காலம் குறித்த தேடலில் இறங்கினோம்.

தனது உடல்வாகும், ‘அல்ட்ரா மாடர்ன்’ தோற்றமும், எதையும் சுலபத்தில் நம்பிவிடக்கூடிய இளம் பெண்களை எளிதில் வீழ்த்தி விடும் என்பதை, படிக்கும்போதே அனுபவரீதியாக உணர்ந்திருந்தான், சுஜி. பள்ளி மாணவிகளைக்கூட அவன் விட்டு வைக்கவில்லை என்பதற்குப் பெங்களூரு சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் எந்தப் பெண்ணுக்கும் ‘கொக்கி’ போடுவதெல்லாம், சுஜிக்கு கைவந்த கலை. அப்படித்தான், பெங்களூருவில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டான். அவளுடைய பெற்றோர் வீட்டில் இல்லாத நாட்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பி விடுவான். அவளுடைய வீட்டில் ஒருநாள் இரவு அவன் தங்கிவிட, விடிந்ததும் அவசர அவசரமாகப் பள்ளிக்குச் செல்ல அவள் ஆயத்தமானாள். இவனோ, படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. அதனால் அவள், "நான் ஸ்கூலுக்கு போறேன். நீ வெளிய போகும்போது வீட்டுச் சாவியை இந்த இடத்தில் வைத்துவிட்டுப் போ" என்று சொல்லிவிட்டு சென்றாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, லேப் டாப் உள்ளிட்ட விலை யுயர்ந்த பொருட்களை சுஜி திருடிச் சென்றதை அறிந்து அவள் அதிர்ந்தாள்.
 

suji

 

வீட்டுக்குத் திரும்பிய பெற்றோரிடம் யாரோ பொருட்களைத் திருடிச் சென்றுவிட்டார்கள் என்று கூறினாள். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. "நீ என்ன திருடனா?' என்று சுஜியைத் தொடர்புகொண்டு அந்த மாணவி திட்ட, "ஒழுங்கு மரியாதையாக உன் வீட்டில் எந்தெந்த இடத்தில் என்னுடைய ஃபிங்கர் பிரிண்ட் இருக்கிறதோ, அதையெல்லாம் அழித்துவிடு. இல்லாவிட்டால், நீ அசிங்கப்பட்டு போவாய்' என்று மிரட்டியிருக்கிறான். இன்றும்கூட, அங்குள்ள காவல் நிலையத்தில், மர்ம நபர் திருடிச் சென்றதாகவே வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வசதியான பெண்களேயே குறி வைப்பான் சுஜி. தன்னுடன் பழகுபவர்களைக் காதல் கிறக்கத்திலேயே வைத்திருப்பதில் அவன் கில்லாடி. முதல் சந்திப்பிலேயே ‘நான் உன்ன மேரேஜ் பண்ணிக்கிறேன்‘ என்றுதான் ஆரம்பிப்பான். அடுத்து, "உன்னோட பாஸ்ட்ட பத்தி எனக்குக் கவலை இல்ல. என்னோட பாஸ்ட்ட பத்தி நீயும் கவலைப்படக் கூடாது. ஃப்யூச்சர பத்தி மட்டும் யோசிப்போம்" என்று யதார்த்தமாகப் பேசி நம்ப வைப்பான். திடீரென்று, ஒரு காரணமும் இல்லாமல் தன்னை நம்பிய பெண்ணிடம் சில நாட்கள் பேசவே மாட்டான். போனையும் அட்டெண்ட் பண்ண மாட்டான். அந்தப் பெண் தவித்திருக்கும் நிலையில், அவளது போன் காலை திடீரென அட்டெண்ட் பண்ணுவான். திட்டிவிட்டு லைனை துண்டித்து விடுவான். அன்றிரவு, அந்தப் பெண்ணிடம் வீடியோ காலில் பேசி ‘உன்னைப் பார்க்க வேண்டும். என்று உத்தரவு போடுவான். ஊடலுக்குப் பின் கூடல் என்பதுபோல அவளும் நடந்துகொள்வாள். அவன் ‘ரெகார்ட்’ செய்துவிட்டு, பின்னாளில் சாவகாசமாக பிளாக்-மெயில் செய்வான். இதே ஸ்டைலில் தான் தன்னிடம் பழகிய பெண்களிடமெல்லாம் பணம் பறித்திருக்கிறான். 

அவன் தங்குவதெல்லாம் நட்சத்திர விடுதிகளில்தான். அதற்கான செலவை, தன்னுடன் பழகிய பெண்களின் தலையில் கட்டி விடுவான். எப்படியென்றால், தன்னால் மிரட்டப்படும் பெண்ணிடம், ‘ஆன்-லைன்ல அங்கே ரூம் புக் பண்ணிடு’ என்று சொன்ன மாத்திரத்தில், அந்தப் பெண்ணும் அதைச் செய்துவிடுவாள். ஒரு பெண்ணின் செலவில் புக் செய்த ரூமில் இன்னொரு பெண்ணை அழைத்துச் சென்று அனுபவிப்பான். அந்த இன்னொரு பெண்ணோ, அடுத்து சுஜியால் மிரட்டலுக்கு ஆளாவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்.


சென்னையில் பிரபலமான அந்த நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தபோது, 20 நிமிடங்களில் நான்கைந்து பெண்களுக்கு போன் பண்ணியிருக்கிறான். மளமளவென்று அவனுடைய பேங்க் பேலன்ஸ் 2 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சம் ஆகியிருக்கிறது. அப்போது நண்பர்களிடம் சுஜி காலரைத் தூக்கிவிட்டு, "பணம் சம்பாதிக்கிறதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல'' என்று பந்தா பண்ணியிருக்கிறான்.

பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 90-க்கும் மேல் என்றாலும், ஒரே சமயத்தில் 30 பெண்கள் வரையிலும் தொடர்பில் இருப்பான். சலித்து விடும் நிலையில், தன்னுடன் பழகிய பெண்ணின் போன் நம்பரை, நண்பர்களுக்குக் கொடுத்து, தாராள பிரபுவாகிவிடுவான். ஏற்கனவே திட்ட மிட்டபடி அந்தப் பெண்ணிடம் சுஜி கோபமுகம் காண்பிப்பான். "நீ எதுக்குடி அவன்கிட்ட பேசின? என்கிட்ட பழகின மாதிரியே அவன்கிட்டயும் பழகிட்டல்ல... உன்ன எப்படி மேரேஜ் பண்ணுவேன்?'’ என்று டார்ச்சர் பண்ணுவான். நேரில் சந்திக்கும்போது அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்குவான். இதுதான், ஒவ்வொரு மிரட்டலின் போதும் பணம் காய்ச்சி மரமாகக் கொட்டியிருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் மாட்டவே கூடாது என்ற திட்டமிடலுடன், மலேசியாவிலுள்ள நண்பர்கள் மூலம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கணக்கு ஆரம்பித்துள்ளான். ஏமாந்த பெண்களுக்காக, அங்கங்கே நூல் பிடித்து தான் இருக்கும் இடம் தேடி வந்து 'ஏன்டா இப்படி பண்ணுன?' என்று யாராவது பஞ்சாயத்து பண்ண முயற்சித்தால், உள்ளூரில் செல்வாக்கான ஆளும்கட்சி புள்ளிகள், அதிரடி வழக்கறிஞர்கள், கந்துவட்டி பேர்வழிகளெல்லாம் கோதாவில் இறங்கி, வந்தவர்களை விரட்டியடித்து, சுஜியைக் காப்பாற்றிவிடுவார்கள். அந்தளவுக்கு அவர்களையும் குளிப்பாட்டியுள்ளான்.

அழிக்கப்படும் வீடியோக்கள்! 

தற்போது, போலீஸ் கஸ்டடியில் ஒரு கஷ்டமும் இல்லாதபடி, புது மாப்பிள்ளை ரேஞ்சுக்கு சுஜியை வைத்திருப்பதால், உண்மையிலேயே அது அவனுக்கு மாமியார் வீடாகிப் போனதாம். சுஜியை விசாரணைக்கு எடுத்துள்ள ஏ.எஸ்.பி. ஜவஹர் தலைமையிலான 3 தனிப்படை டீமும், சுஜியின் முக்கியக் கூட்டாளிகளான, அந்த 7 வி.ஐ.பி.க்கள் யாரென்று தெரிந்தும், கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில், காவல்துறை வட்டாரத்தில் நேர்மையான ஒருவரிடம் நம்மால் பேச முடிந்தது. “சுஜியிடமிருந்து கைப்பற்றிய செல்போன், லேப் டாப் போக, 4 டிபி மற்றும் 8 டிபி கொண்ட இரண்டு ஹார்ட் டிஸ்க்கில், 90-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களிடம் நடத்திய பாலியல் வேட்டை, 5 நிமிடங்கள், 15 நிமிடங்கள் ஓடக்கூடிய 400-க்கும் மேற்பட்ட வீடியோக்களாக உள்ளன. 14 வயது பள்ளி மாணவியைப் பாடாய்ப்படுத்தியதையும் பதிவு செய்திருக்கிறான். அவன் உல்லாசமாக இருந்த போது சில பெண்களிடம், மத்தியிலும், மாநிலத்திலும், சென்னையிலிருந்து டெல்லி வரை ஆளும் கட்சி பிரமுகர்களோடு தனக்குள்ள தொடர்பினை, அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே போதையில் உளறிய வீடியோவும் சிக்கியிருக்கிறது. அதனால், சில வீடியோக்களை காவல்துறையே ‘டெலிட்’ செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது'' என்றார் வேதனையுடன்.''
 

http://onelink.to/nknapp


தப்பிக்க விடக்கூடாது! 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புகார் தாரரின் வழக்கறிஞர் புருஷோத்தமன் நம்மிடம் "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோர்ட் ரொம்ப சிவியரா இருந்துச்சு. ட்ரையல் பொசிஷன் என்ன ஆச்சு? இந்த மாதிரி கேஸ்ல சாட்சிகள் கோர்ட்டுக்கு வந்து சொல்லுறதே பெரிய விஷயம். அப்படியிருக்கும்போது, காலம் கடந்து ட்ரையல் ஏற்றினால், குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். ஏனென்றால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவருக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கும். இல்லையென்றால், எதற்கு வம்பு என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால், இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக ‘சார்ஜ்-ஷீட்’ போடணும். ட்ரையல் எடுத்து நடத்தணும். இப்ப இருக்கிற போலீஸ் ஆபிசர் ட்ரான்ஸ்பர் ஆகி போய்விட்டால், அடுத்து வரும் ஆபீசர்கள், இந்த வழக்குக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருவார்கள் என்று தெரியாது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் என்றால் முழுவதுமாக ஃபாலோ பண்ணுவாங்க. அதனால், காலதாமதம் இல்லாமல் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்'' என்றார்.
 

suji


சுஜியின் நண்பர்கள் வசதியானவர்கள் என்பதால், "இந்த வழக்குல எங்க பேரையும் இழுத்து விட்றாத. எத்தனை லட்சம்னாலும் தர்றோம். உன் கேஸயும் நாங்களே பார்த்துக்கிறோம்'’என்று உத்தரவாதம் தந்துள்ளனராம். இன்னொரு புறம், கல்லூரி மாணவிகள், வசதி படைத்த குடும்பப் பெண்கள், தங்களின் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைத்துவிடுவானோ என்ற அச்சத்தில் நடுங்குகின்றனராம். தன் வலையில் விழுந்தவர்களை சுஜி காட்டிக்கொடுக்காமல் இருப்பதற்கு, காவல்துறையினரைச் சரிக்கட்டுவதற்கு என, கூட்டாளிகள் மூலம் பெரிய அளவில் பேரம் நடந்து வருகிறதாம்.

காவல்துறை வாகனத்தில் ஏறும்போது ஆய்வாளர் சாந்தகுமாரியிடம் சுஜி "பத்திரிகையாளர்களால் எனக்கு பப்ளிசிடிதான்... எதிர்காலத்தில் இது எனக்கு வசதியாக இருக்கும்'' என்று 'கமெண்ட்' அடித்து சிரித்திருக்கிறான்.

‘பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு கிடைத்துவரும் ராஜமரியாதை எனக்கு மட்டும் கிடைக்காமலா போகும்?’என்று கஸ்டடியில் கெத்து காட்டுகிறானாம், சுஜி. இந்த நிலையில் சுஜியை என்கவுண்ட்டர் செய்யத் திட்டம் என கலெக்டரிடம் அவனது தந்தை மனு கொடுத்துள்ளார்.


-ராம்கி 

 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.