ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி

09:50 AM Feb 16, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரைகள் முதலியவை நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளும் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் சில கட்டுப்பாடுகளை வழங்கக்கோரி அரசிடம் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை செய்த தமிழக அரசு கடந்த 12ம் தேதி சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு பார்வையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். மேலும் மால்கள், வணிக வளாகங்கள், உணவகங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கும் இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT