Skip to main content

தமிழ்நாட்டில் மீண்டும் தியேட்டர்கள் திறப்பது எப்போது..?

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

gdhgdfhrf

 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் மீண்டும் மூடப்பட்டன. மறுஉத்தரவு வரும்வரை தியேட்டர்களைத் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகின்றன. 

 

இதற்கிடையே, விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சூழல்கள் நிலவினாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவிவரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மேலும், இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் அரசுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

Next Story

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
tamilnadu film exhibitors association satement regards election 2024

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க உழியர்களுக்கும் 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.