Skip to main content

“ஓடிடி வெளியீடு கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்” - திருப்பூர் சுப்ரமணியம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
tiruppur subramaniyan latest press meet

திரையரங்குகள் தொடர்பாகத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என இரண்டு சங்கங்கள் இருக்கின்றன. இதன் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரண்டு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், “ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசவுள்ளோம். 8% லோக்கல் வரி விதிப்பிற்கு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை வைக்கவுள்ளோம். பராமரிப்பு வசதிகளுக்கு ஏசி திரையரங்கத்திற்கு ரூ.10, ஏசி அல்லாத திரையரங்கிற்கு 5 ரூபாய்க்கும் செய்து கொடுக்க அரசாங்கத்திடம் கேட்கவுள்ளோம்.

முன்னதாக படம் ரிலீஸாகும் சமயத்தில் பட விநியோகம் செய்யும் நிறுவனத்திடமிருந்து அனைத்து திரையரங்கிற்கும் ஆட்கள் வருவார்கள். ஆனால் இப்போது ஃபோனில் மட்டுமே தொடர்பு கொண்டு வசூல் விவரங்களை கேட்கின்றனர். அந்த ஆட்களுக்கு பேட்டா கொடுக்க வேண்டிய முறை இருந்து கொண்டு வருகிறது. அதை ரத்து செய்ய தயாரிப்பாளர்களிடத்தில் கேட்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தவுள்ளோம்.

தமிழகத்தில் விநியோகஸ்தர்கள் பங்கு தொகையான 80 சதவீதத்தை குறைத்து அதிகபட்சம் 60 சதவீதம் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். திரையரங்கில் நிகழ்ச்சி, திருமணம், விளையாட்டு உள்ளிட்டவை ஒளிபரப்ப கோரிக்கை வைக்கவுள்ளோம்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.