ADVERTISEMENT

ராகுல்காந்தி அப்படி பேசினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? திமுகவிடம் கேட்ட முதல்வர்...

03:20 PM Jul 01, 2019 | kamalkumar

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளின் ஒருபகுதியாக, சென்னை குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அப்போது நிதி ஆயோக் அறிக்கையின்படி 2022ம் ஆண்டு சென்னையில் குடிநீர் இருக்காது என நிதிஆயோக் கூறியிருந்தது. ஆனால் 2019ம் ஆண்டிலேயே பஞ்சம் வந்துவிட்டது, நிதிஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை என்றும், இந்த ஒருநாளை பிரச்சனை குறித்து பேச ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடகாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அவர் கூறியதை நான் கூறுகிறேன், இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். இதை நான் பல பொதுக்கூட்டங்களில் பேசினேன். அதற்கு காங்கிரஸ் சார்பிலோ, திமுக சார்பிலோ எந்த பதிலும் இல்லை.

ராகுல்காந்தி கூறினார், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தவுடன், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று. இப்போதே நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. சித்தராமையா முதல்வராக இருந்தபோது, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது அப்போது, தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய தண்ணீரிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் விடுங்கள் அப்படினு கோரிக்கை வைத்தோம், கடிதம் எழுதினேன். நானே நேரடியா வந்து உங்களை சந்திக்கிறேன் அப்படினு சொன்னேன். ஆனால் அதற்கு எந்த பதிலுமே கிடைக்கவில்லை.

ஆகவே, அங்கே உங்கள் கட்சியைச்சேர்ந்த, கூட்டணிக் கட்சியைச்சேர்ந்தவர்களின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தயவுசெய்து இவ்வளவு பேசுகிற நீங்கள், அந்த தண்ணீரை திறந்துவிட்டால் இங்கே மேட்டூர் அணையிலிருந்து, வீராணத்திற்கு தண்ணீர் கொண்டு, இங்கு எளிமையாக தண்ணீர் வழங்கிவிடலாம் என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT