ADVERTISEMENT

தமிழக அரசு உருவாக்கிய புதிய பதவி! மூத்த சிறப்பு வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்!

03:46 PM Jul 30, 2020 | rajavel

ADVERTISEMENT

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராக ஏதுவாக, அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி-யை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான நிலையில், 2013 மார்ச் மாதம், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அந்தப் பதவியில் இருந்த நிலையில் ராஜினாமா செய்தார்.

தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் இருந்து வருகிறார். அவரைத் தவிர கூடுதல் தலைமை வழக்கறிஞராக 9 பேர் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆகியவற்றில் ஆஜராகி வருகிறார்கள்.

இந்நிலையில், அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற பதவியைத் தற்போது புதிதாக உருவாக்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவதற்காக, அந்தப் பதவியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராகும் அவருக்கு, அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ஊதியம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. ஆளுநர் ஒப்புதலின் பேரில், தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அரசு சார்பில் ஏ.எல்.சோமயாஜி ஆஜராக வழிவகை செய்யப்பட்டுள்ளது

ஏ.எல்.சோமயாஜி, 1995-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக அங்கிகரிக்கப்பட்டவர். 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்துள்ளார். 2013 முதல் 2016 வரை அரசு தலைமை வழக்கறிஞராக இருந்து, ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT