சீனாவில் வுஹான் மாகணத்தில் முதலில் பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ், இன்று 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Advertisment

Corona Virus - TNgovt - CM Edappadi Palaniswami Consulting

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதில் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார்.