Skip to main content

நட்பிற்கும் அளவுண்டு; இல்லையென்றால் இப்படி நடக்க வாய்ப்புண்டு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 35

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 advocate-santhakumaris-valakku-en-35

 

உறவாடும் நண்பர்கள், மற்றும் அவர்களது நட்புக்கான அளவுகோல் குறித்து ஒரு வழக்கு மூலம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்

 

செந்தில் என்பவருடைய வழக்கு இது. ஒரு ஆட்டோ டிரைவர் அவர். தன்னுடைய வாழ்க்கையே போய்விட்டது என்று அவர் கண்ணீர் விட்டார். ஆட்டோவுக்கு மாதத்தவணை செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. தன்னுடைய ஏரியாவில் ஒரு பெண்ணை விரும்பிய செந்தில், அவளைத் திருமணம் செய்ய விரும்பினார். அந்தக் குடும்பம் சரியில்லை என்கிற எச்சரிக்கை வந்தாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பெற்றோரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொண்டார். 

 

திருமணத்துக்குப் பிறகு சிறிது காலம் அவர்கள் சந்தோஷமாகவே இருந்தனர். காலம் செல்லச் செல்ல அந்தப் பெண்ணின் தேவைகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. அவருடைய தாயை அவளுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர் தனிக்குடித்தனம் சென்றார். எப்போதும் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பினார் அவருடைய அப்பா. அவளுடைய தேவைகள் அதிகரித்ததால் ஆட்டோவுக்கு தவணை கட்ட வைத்திருந்த பணத்தை அவளிடம் அவர் வழங்கினார். அதனால் அவரால் சரியான நேரத்திற்கு தவணைப் பணத்தைக் கட்ட முடியவில்லை. கடன் தொல்லை அதிகரித்தது.

 

சங்கர் என்ற நண்பன் ஒருவன் செந்திலுக்கு உதவுவதாக முன் வந்தான். செந்திலும் அந்த உதவியை ஏற்றுக்கொண்டார். செந்திலுடைய லைசென்ஸையும் அவன் வாங்கிக்கொண்டான். அதை திருப்பிக் கேட்டபோது டூப்ளிகேட் லைசென்ஸ் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தான். அதன் பிறகு சங்கர் அடிக்கடி வீட்டுக்கு வர ஆரம்பித்தான். சங்கருக்கு செந்திலின் மனைவியோடு பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. இதை கவனித்த செந்திலின் தாய் செந்திலை எச்சரித்தார். அடிக்கடி வெளியே சென்று வர ஆரம்பித்தாள். விசாரித்தபோது பெண் தோழியுடன் தான் வெளியே சென்றதாக அவள் பொய் கூறினாள். 

 

தான் கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பிக் கேட்டு செந்திலை சங்கர் மிரட்ட ஆரம்பித்தான். சங்கரோடு அவளுக்கு ஏற்பட்ட பழக்கம் குறித்து செந்தில் எச்சரித்தபோது, தற்கொலை செய்துகொள்வேன் என்று அவள் மிரட்டினாள். ஒருநாள் அதற்கு அவள் முயற்சியும் செய்தாள். அப்போது செந்தில் அவளை சமாதானப்படுத்தினார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தனர். திடீரென ஒருநாள் அவள் வீட்டை விட்டு கிளம்பிச் சென்றாள். அம்மா வீட்டில் அவள் இருந்ததைப் பார்த்து அவன் ஆசுவாசமடைந்தான். அவளிடமிருந்து அதன் பிறகு அவனுக்கு போன் வந்தது. சந்தேகப்படுவதாலும், கடனைக் கொடுக்க மறுப்பதாலும் வீட்டுக்கு வர முடியாது என்று அவள் கூறினாள். 

 

அன்றைய தினமே வீட்டுக்கு வந்த சங்கர், ஆட்டோவின் சாவியைப் பிடுங்கினான். கடனை திருப்பித் தருமாறு கேட்டான். செந்திலின் தந்தை 50000 ரூபாய் பணம் கொடுத்தார். கடனை அடைத்துவிட்டு மனைவியை வீட்டுக்கு அழைத்து வருமாறு கூறினார். மனைவியைத் தேடி அவளுடைய தாய் வீட்டுக்கு சென்றபோது அவளுடைய குடும்பத்தினர் செந்திலை அடித்தனர். அழுதுகொண்டே அவர் வீடு திரும்பினார். சங்கரோடு வாழவே தான் விரும்புவதாக அவள் வெளிப்படையாக தெரிவித்தாள். அப்போதுதான் செந்தில் நம்மிடம் வந்தார். இந்த நிலையிலும் மனைவியோடு சேர்ந்து வாழவே அவர் விரும்பினார். 

 

எனவே சேர்ந்து வாழ்வதற்காக கேஸ் போட்டோம். விவாகரத்து வழங்க வேண்டி அவள் வற்புறுத்தினாள். அதன் பிறகு விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். அவள் அதில் ஆஜராகவில்லை. எனவே விவாகரத்து வழங்கப்பட்டது. நட்பு என்பது எப்போதும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும். வேண்டாத உறவுகளைத் தவிர்க்க வேண்டும்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சில நேரங்களில் திருமண வாழ்க்கை ஆண்களுக்கும் நரகம்தான் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 41

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

 advocate-santhakumaris-valakku-en-41

 

தான் சந்தித்த வித்தியாசமான குடும்ப நல சிக்கல்கள் குறித்தும் அதைக் கையாண்ட விதம் குறித்தும் ‘வழக்கு எண்’ தொடர் வழியாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு வழக்கு குறித்த விவரங்களை வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பாஸ்கர் என்பவருடைய வழக்கு இது. நல்ல வேலை, சமூகத்தில் பொறுப்பான இளைஞராகவும், குடும்பத்திற்கு சிறந்த பிள்ளையாகவும் இருந்து வருபவர். நிட்சய திருமணம்தான் நடக்கிறது. கல்யாணமானதிலிருந்தே கணவன் மீதான அதிகப்படியான அன்பினை எல்லோரின் முன்னிலும் தெரிய வைக்கிற பெண்ணாக இருக்கிறாள். அதாவது எல்லோரின் முன்னிலும் கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது அவளது வழக்கமாக இருந்திருக்கிறது.

 

ஆனால் பாஸ்கருக்கோ படுக்கையறை தவிர மற்ற இடங்களிலோ, பெற்றோரின் முன்னிலையிலோ கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லை. இதை அவளிடம் எடுத்துச் சொன்னால் “என்னை பிடிக்கவில்லையா? என் மீது காதல் இல்லையா?” என்றெல்லாம் அழுது அடம்பிடிப்பவளாகவும், அறைக்கதவை சாத்திக்கொண்டு நீண்ட நேரமாகியும் கதவை திறக்காமலும் இருப்பவளாக இருந்திருக்கிறாள்.

 

இந்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக பாஸ்கரின் அம்மா பெண்ணின் அக்காவிடம், உங்க வீட்டு பிள்ளை இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று ஒரு புகாரை சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த அக்காவும் தங்கையை அழைத்து கண்டித்திருக்கிறாள். இதற்கு பழிவாங்கும் விதமாக மாமியாரை பூரிக் கட்டையைக் கொண்டு அந்த பெண் ஒரு நாள் பலமாகத் தாக்கியிருக்கிறாள்.

 

அலுவலகம் சென்ற பாஸ்கர் பதறிப்போய் வீட்டிற்கு வந்து அம்மாவை மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார். மனைவியும் கொஞ்ச நாளைக்கு அவளது அம்மா வீட்டிலேயே இருக்கட்டும் என்று விட்டு வந்திருக்கிறார். அந்த பெண்ணின் தம்பி ஒருவர் அக்காவிற்காக பரிந்து பேசி பாஸ்கர் வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்.

 

அம்மாவை அடித்ததால் சில நாட்களாக வீட்டில் இருந்த மனைவியிடம் பேசாமல் இருந்திருக்கிறார் பாஸ்கர். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைத்திருக்கிறாள். ஆனால் அதற்கு விருப்பம் தெரிவிக்காத பாஸ்கரை மிரட்டும் விதமாக மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து விடுவதாக கொலை மிரட்டலும் விட்டிருக்கிறாள்.

 

அக்காவை அழைத்து வந்த தம்பியிடம் சொல்லி சிறிது நாளைக்கு பிரிந்து இருக்கலாம் என்று முடிவெடுத்த பாஸ்கருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெண், தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருக்கிறாள். தன்னுடைய அம்மாவை பூரிக்கட்டையால் தாக்கினாள் என்று பாஸ்கர் தன் பங்கிற்கு சொல்ல, அவளோ பாஸ்கரின் அம்மா தானே தாக்கிக்கொண்டு பழியை தன் மீது போடுவதாக காவல்நிலையத்தில் சொல்லி இருக்கிறாள்.

 

இனிமேல் இவளோடு வாழ முடியாது என்று முடிவெடுத்த பாஸ்கர். டைவர்ஸ்க்கு அப்ளை செய்தார். ஆனால் இவள் செய்த எந்த குற்றத்தையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை, நல்வாய்ப்பாக இவள் தற்கொலை முயற்சி செய்ததை பாஸ்கரின் அம்மா வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவதும் ஒரு வகை குற்றச்செயல் தான் என்று பாஸ்கருக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுக்கப்பட்டது.

 

திருமண வாழ்க்கை பல சமயம் ஆண்களால் பெண்களுக்கு கொடுமை நிகழ்த்தப்பட்டு நரக வாழ்க்கை ஆகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருப்போம். ஆனால் இப்பொழுதெல்லாம் பெண்களால்தான் சில ஆண்களின் வாழ்க்கை நரகமாக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பொய் மேல் பொய் சொன்ன மனைவி; சர்ச்சில் சிக்கிய ஆதாரம் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 40

Published on 07/11/2023 | Edited on 21/11/2023

 

 advocate-santhakumaris-valakku-en-41

 

தான் சந்தித்த பல்வேறு வகையான வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

ஜேம்ஸ் என்பவருடைய வழக்கு இது. முதல் திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து சர்ச் வழியாக பெண் தேடியபோது ஒரு பெண் கிடைக்கிறாள். அவளுக்கு இது முதல் திருமணம். பெண்ணை நேரில் சந்தித்து நான் ஏற்கனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவன். உனக்கு முதல் திருமணம். ஆட்சேபனை ஏதுமில்லையா என்றதற்கு இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டாள் அந்த பெண்.

 

சர்ச் உதவியோடு இருவீட்டாரின் சம்மதத்தோடு தான் திருமணம் நடக்கிறது. ஜேம்ஸ் காலையில் வேலைக்கு போய்விட்டு இரவு வீட்டிற்கு திரும்புகிறவன். ஆனால் அந்த பெண் ஐடி நிறுவனத்தில் வெளிநாட்டு கம்பெனிக்கு வேலை செய்கிறவள். இரவு தான் வேலையே ஆரம்பிப்பாள். ஜேம்ஸ் இரவு தூங்கும் முன் கணவன், மனைவி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தூங்கலாம் என்று காத்திருந்தால் வரமாட்டாள். நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் விடியற்காலையில் வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எழுப்புவாள். அந்த நேரத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ஜேம்ஸ் சொல்லிவிடுவான்.

 

இது ஒருபுறம் இருக்க, ஒரு நாள் அளவுக்கு அதிகமான எண்ணெய் ஊற்றி சமைத்திருக்கிறாள். வீட்டில் வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் இப்படி சமைக்காதே என்றதற்கு கோபித்துக் கொண்டு இரவில் அவளது அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சின்ன கோபம் தானே திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்திருந்தால் காவல் நிலையத்திலிருந்து ஜேம்ஸை அழைத்திருக்கிறார்கள்.

 

முதல் திருமணம் நடந்தது தெரியாமல் ஏமாற்றி தன்னை திருமண மோசடி செய்ததாக புகார் கொடுத்திருக்கிறாள். வழக்கு நடந்து சர்ச்சிலிருந்து ஆதாரங்கள் திரட்டி கொடுக்கப்பட்டது. கிறித்துவ திருமணங்களில் அனைத்து ஆதாரங்களும், விவரங்களும் சர்ச்சில் ஒப்படைக்கப்பட வேண்டும். அப்படி ஒப்படைத்தது ஜேம்ஸ்க்கு உதவியாகவும் அந்த பெண்ணுக்கு பின்விளைவாகவும் ஆகிவிட்டது.

 

சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்தவள், என்னை வீட்டிலிருந்து வெளியே தள்ளி பூட்டி விடுகிறார் என்று புகார் கொடுத்திருக்கிறாள். அவசரமாக சாவியை எடுத்துக் கொண்டு ஜேம்ஸ் போனதை திரித்திருக்கிறாள். இப்படியே எதற்கெடுத்தாலும் பொய், அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு போவது, காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது என்று அந்த பெண் தொடர்ச்சியாக செய்து வந்ததால் ஜேம்ஸ் தரப்பிலிருந்து டைவர்ஸ்க்கு அப்ளை செய்தார்கள். 

 

மூன்று முறை அழைப்பு விடுத்தும் அந்த பெண் தரப்பு நியாயத்தை சொல்ல கோர்ட்டிற்கு வராததால் ஜேம்ஸ்க்கு டைவர்ஸ் கொடுத்து தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இல்லற வாழ்வில் உண்மையாகவும் நேர்மையாகவும் உறவுக்கு முக்கியத்துவம் தந்து வாழ வேண்டும். 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்