Corona Virus Lockdown - Electricity Bill - TNEB announcement

Advertisment

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என, வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றபோது, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது அதை உறுதிசெய்துள்ள மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.