ADVERTISEMENT

மோடி அமைச்சரவையில் இடம்பெறாத முக்கிய தலைவர்கள்!

10:38 AM May 31, 2019 | Anonymous (not verified)

17ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிந்து மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது.இதில் பாஜக மட்டும் 303 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.இந்த நிலையில் நேற்று மோடி தலைமையிலான 57 மந்திரிகளை கொண்ட மந்திரிசபைக்கு குடியரசு தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT



மேலும் கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்த சில வி.ஐ.பி.க்கள் இந்த முறை மோடி அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அறிவித்தார்.இதனால் மத்திய அமைச்சரவையில் முதன்முறையாக அமித்ஷா நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். முன்பு வெளியுறவுதுறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் இருந்தார்.அவரும் இந்த முறை உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அமைச்சர் பதவியில் இடம்பெறவில்லை.

ADVERTISEMENT


மேலும் கடந்த முறை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜ்யவர்தன் ரத்தோரும் இடம்பெறவில்லை. மேலும் ஜெயந்த் சின்கா, ஜேபி நட்டா ஆகிய இருவரும் இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை.இதில் ஜேபி நட்டா பாஜக தலைவர் என்ற செய்தி வந்துகொண்டிருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT