Skip to main content

ஆண்கள் யாரும் என்மேல கோவப்படாதீங்க! ராகுல் காந்தி அதிரடி!

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

இந்தியாவில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த நிலையில் 5ஆம் கட்ட தேர்தல் வரும் திங்கள் கிழமை நடக்கவிருக்கிறது.காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். ரேவா தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது   வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் நியாய் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகையை ஒவ்வொரு குடும்பத்திலும்  அந்த குடும்பத்தை நிர்வகிக்கும் அந்த குடும்பத்து பெண்கள் பெயரில் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதற்காக, ஆண்கள் யாரும் என் மீது கோபமடைய வேண்டாம். இதேபோல், 5 ஆண்டுகளில் ரூ.3.60 லட்சம் செலுத்தப்படும். இந்த பணத்தை கொண்டு நீங்கள் குடும்பத்துக்கு தேவையான பொருட்களை கடைகளில்  சென்று தாராளமாக வாங்கலாம். இதனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. மோடி அவர்களே நீங்கள் எப்போது எல்லாம் உங்களை காவலாளி’ என கூறுகிறீர்களோ, அப்போதெல்லாம் மக்கள் உங்களை ` திருடன், திருடன்’ என கூறிக்கொண்டுள்ளனர். 

 

rahul gandhi



தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி , மோடியின் பேச்சை கேட்டால் தெரியும். அவர் தனது 56 அங்குல மார்பளவு குறித்து பேசி வந்தார். தற்போது என்ன நடந்தது? இப்போதெல்லாம் கடந்த 2014ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதியான வேலைவாய்ப்பு வழங்குவேன், ரூ.15 லட்சத்தை ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடுவேன் என்பதை மறந்து கூட பேச மறுக்கிறார் இதிலிருந்து மோடி எவ்வளவு பொய் சொல்லுகிறார் என்று மக்களுக்கு தெரியும் என்று கூறினார். அதானி, அம்பானி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகிய தொழிலதிபர்களின் காவலாளியாக மாறிவருகிறார். பொதுமக்களின் பணத்தை எடுத்து அந்த பணக்கார நண்பர்களுக்கு மோடி வாரி வழங்கியுள்ளார். ஆனால் நாட்டு மக்கள்  மோடியை விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் ஏழைகளின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. சவுகிதார் (காவலாளி) என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் எனக்கு கூறியுள்ளது என்றார்.
 

சார்ந்த செய்திகள்